TN GOVT Junior Assistant and Ticket Salesman Posts

TN GOVT Junior Assistant and Ticket Salesman Posts

தமிழ்நாடு அரசு, இந்து சமய அறநிலையத்துறை, அருள்மிகு வனபத்ரகாளியம்மன் திருக்கோயில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

அருள்மிகு வனபத்ரகாளியம்மன் திருக்கோயில் கீழ்காணும் காலியிடங்களுக்கு தகுதியுள்ள இந்து சமயத்தை சார்ந்த நபர்களிடமிருந்து 16.7.2022 அன்று மாலை 5.45 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இளநிலை உதவியாளர்-01

சம்பளம் ரூ.18500-58600

பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றிருத்தல் வேண்டும்.

சீட்டு விற்பனையாளர் -03

சம்பளம் ரூ.18500-58600

பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றிருத்தல் வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் 15.7.2021 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

இந்து மதத்தை சார்ந்தவராகவும், தமிழ்நாட்டை சார்ந்தவராகவும் இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் நல்ல தேக ஆரோக்கியம் உள்ளவராக இருக்க வேண்டும்.

ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.

மேலுறையின் மீது கண்டிப்பாக பதவியின் பெயர் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.

நேரடி நியமனம் இந்து சமய அறநிலையத்துறை சட்ட விதிகளுக்கு உட்பட்டவை.

விண்ணப்பங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அறிவிப்பு அனுப்பப்படும்.

விண்ணப்பங்கள் திருக்கோயில் அலுவலகத்தில் ரூபாய் 100 ரூபாய் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் இதர நிபந்தனைகள் மற்றும் இதர விவரங்களை அலுவலக நாட்களில் அலுவலக நேரத்தில் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : உதவி ஆணையர் /செயல் அலுவலர், அருள்மிகு வனபத்ரகாளியம்மன் திருக்கோயில், தேக்கம்பட்டி, நெல்லித்துறை அஞ்சல், மேட்டுப்பாளையம் வட்டம், கோவை மாவட்டம்-641 305

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *