Fisheries and Fishermen Welfare – PMMSY Scheme

பிரதான் மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டம் (PMMSY)-2021-22-ன் கீழ் மீன் வளர்ப்பினை ஊக்கப்படுத்திட மானியம் வழங்கும் திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டத்தில் மீன் உற்பத்தி மற்றும் வளர்ச்சியினை மேம்படுத்தும் விதமாக 2021-22-ஆம் ஆண்டில் (PMMSY) பிரதான் மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மீன் வளர்ப்பினை ஊக்கப்படுத்தும் விதமாக திட்டங்களில் சிறிய அளவிலான பயோபிளாக் குளங்களில் மீன் வளர்ப்பு செய்தல், புதிய மீன்வளர்ப்பு குளங்கள் அமைத்தல், புதிய நன்னீர் மீன்குஞ்சு பொரிப்பகம், புதிய மீன் குஞ்சு வளர்ப்பு குளங்கள் அமைத்தல், நடுத்தர அளவிலான அலங்கார மீன் வளர்த்தெடுத்தல், புறக்கடை/கொல்லைப்புற அலங்கார மீன் வளர்ப்பு, அலங்கார மீன் குஞ்சு வளர்ப்பு மற்றும் விற்பனை அங்காடி அமைத்தல் போன்ற திட்டங்களுக்கு பொதுப்பிரிவினருக்கு 40 சதவீதம் மானியமும், ஆதி திராவிடர் மற்றும் பெண்களுக்கு 60 சதவீதம் மானியமும் வழங்கப்படுகிறது.

மீன் வளர்ப்பில் ஆர்வமுள்ள, பயனடைய விரும்பும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள், திண்டுக்கல், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பப் படிவத்தினை பெற்று உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர், ‘மீன்வளம் மற்றும் மீனவர் நல உதவி இயக்குநர் அலுவலகம், பி4/63, 80 அடி ரோடு, நேருஜி நகர், திண்டுக்கல் – 624001’ என்ற அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

Fisheries and Fishermen Welfare – PMMSY Scheme Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *