Kovilpatti Panchayat Union Direct Recruitment 2023

Notification for the post of Jeep Driver, Office Assistant and Night Watchman in Kovilpatti Panchayat Union (Direct Recruitment)

தூத்துக்குடி மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம்

ஒன்றிய தலைப்பு ஓட்டுநர், அலுவலக உதவியாளர் மற்றும் இரவு காவலர் காலி பணியிடங்களுக்கு நேரடி நியமனம்.

தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைப்பில் காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநர் -ஒன்று ,அலுவலக உதவியாளர்- இரண்டு, இரவு காவலர் -ஒன்று பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவிகள் மற்றும் காலியிடங்கள்

ஈப்பு ஓட்டுநர் -ஒன்று ,அலுவலக உதவியாளர்- இரண்டு, இரவு காவலர் -ஒன்று

கல்வி தகுதி மற்றும் இதரத் தகுதிகள் :

ஈப்பு ஓட்டுநர் :

எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மோட்டார் வாகன சட்டம் 1988 (மத்திய அரசு சட்டம் 59/1988 கீழான தகுதியுடைய அதிகாரிகள் வழங்கப்பட்ட செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் பெற்றிருத்தல் வேண்டும்.

ஐந்து ஆண்டுகளுக்கு குறைவில்லாமல் மோட்டார் வாகனங்களை ஓட்டியமைக்கான நடைமுறை அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும்.

அலுவலக உதவியாளர்:

எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

இரவு காவலர் : எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் விபரம்

ஈப்பு ஓட்டுநர்
சம்பளம் ரூ.19500-62000

அலுவலக உதவியாளர் மற்றும் இரவு காவலர்
சம்பளம் ரூ.15700-50000

வயது வரம்பு

நிபந்தனைகள்:

விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதி, இருப்பிடம், ஜாதி சான்று, முன்னுரிமைச் சான்று மற்றும் இதர சான்றுகளின் ஆதாரம் இணைத்து அனுப்ப வேண்டும்.

ஒவ்வொரு பணியிடத்திற்கும் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்ட கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதியில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

சுயமுகவரியுடன் கூடிய ரூபாய் 25 அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட அஞ்சல் உறை ஒன்று இணைத்து அனுப்பப்பட வேண்டும்.

தகுதி உள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் நடைபெறும் விவரம் தனியே அஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்வதற்கு பயணப்படி ஏதும் வழங்கப்பட மாட்டாது

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 7.4.2023 பிற்பகல் 5.45 மணிக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.

ஆணையாளர்,
ஊராட்சி ஒன்றியம்,
கோவில்பட்டி 628501
தூத்துக்குடி மாவட்டம்.

தகுதி உள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்து நேர்காணல் கடிதம் பின்னர் அனுப்பி வைக்கப்படும்.

ஓட்டுநர், அலுவலக உதவியாளர் மற்றும் இரவு காவலர் காலி பணியிடங்களுக்கான விண்ணப்ப படிவம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் மற்றும் தூத்துக்குடி மாவட்ட இணையதளம் https://thoothukudi.nic.in/notice_category/recruitment/ ஆகியவற்றில் விடப்பட்டுள்ளது

Notification Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *