TN Govt Elementary School Recruitment 2023

வேலூர் மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் பழங்குடியினர் நலத் துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில் பதவி உயர்வு, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பணி நாடுநர் தேர்வு செய்து நிரப்பப்படும் வரை முற்றிலும் தற்காலிக அடிப்படையில் நிரப்பிட அரசாணை பிறப்பித்துள்ளது அதன்படி வேலூர் மாவட்டத்தில் அல்லேரி தொங்குமலை, குடிகம் ஆகிய மூன்று தொடக்கப் பள்ளிகளில் தலா ஒரு பணியிடம் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காலி பணியிடங்களுக்கு மறு கட்டமைப்பு செய்யப்பட்டுள்ள பள்ளி மேலாண்மை குழு மூலம் பணி நாடுநர்களை தேர்வு செய்து தொகுப்பூதியத்தில் நியமிக்கவும் உத்தர விடப்பட்டுள்ளது.

இந்த காலி பணியிடங்களை நிரப்பும்போது பழங்குடியினருக்கு முன்னுரிமை அளிக்கவும், அவர்கள் இல்லாத பட்சத்தில் ஆதிதிராவிடர் இனத்தவருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

ஒன்றுக்கும் மேற்பட்ட தகுதி வாய்ந்த பணி நாடுநர் இடைநிலை ,பட்டதாரி ஆசிரியர் நிலையில் இருந்தால் ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்றவர்களுக்கும் அவ்வாறு இல்லையேல் இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் பணிபுரியும் தன்னார்வலர்களுக்கும் முன்னுரிமை வழங்க வேண்டும்.

விண்ணப்பங்களை நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ உரிய கல்வி சான்றுகளுடன் மாவட்ட ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல அலுவலகத்தில் செப்டம்பர் 5-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சேர்க்க வேண்டும்.

Notification Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *