Tamil Nadu Post office Recruitment 2024 | 10th Pass | Post office Recruitment 2024

அஞ்சல் ஆயுள் காப்பீடு/ கிராம அஞ்சல் ஆயுள் காப்பீடு விற்பனைக்கானப் புதிய நேரடி முகவர்களுக்கான நேர்முகத்தேர்வு 05.02.2024 அன்று சென்னையில் நடைபெறவுள்ளது.

முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், சென்னைக் கோட்டம், அஞ்சல் ஆயுள் காப்பீடு/ கிராம அஞ்சல் ஆயுள் காப்பீடு விற்பனைக்காகப் புதிய நேரடி முகவர்களை ஈடுபடுத்தவிருக்கிறது. விருப்பமுள்ளவர்கள் கீழ்க்காணும் தகுதியைப் பெற்றிருப்பின், சென்னை நகர மத்தியக் கோட்ட அஞ்சலகங்களின் முதுநிலை கண்காளிப்பாளர் அலுவலகத்தில் [எண் 2, சிவஞானம் சாலை, (பாண்டி பஜார் அருகே) தி.நகர், சென்னை 600 017] 05.02.2024 அன்று 10.00 மணிக்கு நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.

     தேவையான தகுதிகள்:

      கல்வி தகுதி: குறைந்தது பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

      வயது வரம்பு: 18-வயதிலிருந்து.

பிரிவுகள்: சுய தொழில் செய்யும் / வேலையில்லா இளைஞர்கள், ஏதேனும் காப்பீட்டு நிறுவனத்தில் பணி புரிந்த முன்னாள் காப்பீட்டு ஆலோசகர்கள்/ முகவர்கள், அங்கன்வாடி மற்றும் மஹிளா மண்டல் பணியாளர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள், முன்னாள் ராணுவத்தினர், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்.

விரும்பத்தக்க தகுதிகள்: ஆயுள் காப்பீடுகளை விற்பனை செய்வதில் முன் அனுபவம் உள்ளவர்கள், கணினிப் பயிற்சி உள்ளவர்கள் / சொந்தப்பகுதி பற்றி நன்கு அறிந்தவர்கள் மற்றும் சென்னையில் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.

இதர ஆயுள் காப்பீட்டு அலுவலகத்தில் முகவர்களாக இருப்பவர்கள், அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவர்களாக விண்ணப்பிக்க தகுதியில்லை.

மேற்கண்ட தகுதியுடையவர்கள் மூன்று புகைப்படத்துடன் (பாஸ்போர்ட்அளவு), அசல் மற்றும் இரண்டு நகல் -வயதுச்சான்று, முகவரிச்சான்று மற்றும் கல்விச்சான்றுடன் அணுகவும். நேர்காணலுக்குப் பின் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ஐந்தாயிரம் ரூபாய்க்கு தேசிய சேமிப்பு பத்திரம் (பணப் பாதுகாப்பு பத்திரமாக) வழங்க வேண்டும்.

இது அஞ்சலக வேலைவாய்ப்பு அல்ல. இந்த நேர்காணல் அஞ்சல் ஆயுள் காப்பீட்டுப் பாலிசிகளை முகவர்கள் மூலம் விற்பனை செய்வதற்காக நடத்தப்படுகிறது. முகவர்களாக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் பிடிக்கும் பாலிசியின் பிரீமியம் அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்கப்படும்.

Notification click here

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2000563

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *