DLSA Recruitment 2024 for PLV | DLSA PLV Madurai Recruitment 2024

மதுரை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், மதுரை

சட்டம் சார்ந்த தன்னார்வ தொண்டர்களாக பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மதுரை, மேலூர், வாடிப்பட்டி, திருமங்கலம், பேரையூர், உசிலம்பட்டி ஆகிய ஊர்களில் இயங்கும் மாவட்ட/ வட்ட சட்டப் பணிகள் குழுவிற்கு சட்டம் சார்ந்த தொண்டர்களாக பணியாற்ற கீழே குறிப்பிட்ட நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் மேலே குறிப்பிட்ட ஊரை சார்ந்தவராக இருக்க வேண்டும்.

ஆசிரியர்கள் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் உட்பட

ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் மூத்த குடிமக்கள்

சமூகப் பணியில் முதுநிலை கல்வி பயிலும் மாணவர்கள்

அங்கன்வாடி பணியாளர்கள் / மருத்துவர்கள் உடல் நல நிபுணர்கள்

மாணவர்கள் மற்றும் சட்டக் கல்லூரி மாணவர்கள் அவர்கள் வழக்கறிஞராக பதிவு செய்யும் வரை

அரசியல் சார்பற்ற அரசு சாரா சமூக சேவை நிறுவனங்கள் மற்றும் சங்க பிரமுகர்கள்

மகளிர் குழுக்கள், மைத்ரி சங்கங்கள் மற்றும் வறியோரை உள்ளடக்கிய சுய உதவிக் குழுக்கள் ஆகியவற்றின் உறுப்பினர்கள்

நீண்ட கால தண்டனைப் பெற்று சிறையில் உள்ள படித்த சிறைவாசிகள்

மாவட்ட /வட்ட சட்டப் பணிகள் தன்னார் சட்டப்பணியாளர் பணிக்கு பொருத்தமாக கருதும் நபர்கள்

கல்வித்தகுதி : பள்ளி இறுதி வகுப்பில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும், புரிந்துணர்வு திறன் உடையவராகவும் இருக்க வேண்டும்.

வயது 18 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.

மதிப்பூதியம் நாள் ஒன்றுக்கு ரூபாய் 500 ரூபாய் மதிப்பூதியம் வழங்கப்படும்

விண்ணப்பிக்க கடைசி நாள் 17.5.2024 மாலை 5:30 மணி

பணிக்காலம் தேர்வு செய்யப்படும் நாளில் இருந்து ஓர் ஆண்டு

பிற விபரம்: மதுரை மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழுவிற்கு 25 தன்னார்வலர்களும், மேலூர், வாடிப்பட்டி திருமங்கலம், பேரையூர், உசிலம்பட்டி ஆகிய ஐந்து தாலுகாவிற்கு தலா ஐந்து நபர்களும் ஆக மொத்தம் 50 நபர்கள்.

இதில் மதுரை மாவட்டத்திற்கு 25 தன்னார்வலர்களும் தேவைப்பட்டால் தலைவர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவுப்படி இதர தாலுகாவிற்கு பணியாற்ற வேண்டும்.

விருப்பமுள்ளவர்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை மட்டுமே பதிவிறக்கம் செய்து விண்ணப்ப படிவத்தினை தெளிவாக பூர்த்தி செய்து உரிய ஆவணங்களின் நகல்களுடன் தபாலிலோ அல்லது நேரிலோ கீழ் கண்ட முகவரிக்கு தேதி என்று 17.05.2024 மாலை 5.30 மணிக்குள் அல்லது அதற்கு முன்பாகவும் மேற்படி அலுவலகத்திற்கு அலுவலக வேலை நாட்களில் கிடைக்கப்பெறுமாறு அனுப்ப கோரப்படுகிறது.

உயர்திரு தலைவர் அவர்கள், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, மாற்று சமரச தீர்வு மையம் ,ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் எதிரில், மதுரை-625 020

சட்டம் சார்ந்த தன்னார்வ தொண்டர்கள் பணி நிரந்தர பணி அல்ல, பணி நிரந்தரம் செய்ய உரிமை கூற முடியாது

PLV Notification

https://madurai.dcourts.gov.in/

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *