Thoothukudi District Court Recruitment 2024 | 10th Pass

தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024

ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்,

தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் கோவில்பட்டி, திருச்செந்தூர், ஸ்ரீ வைகுண்டம், சாத்தான்குளம், விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம் ஆகிய ஊர்களில் இயங்கும் வட்ட சட்டப் பணிகள் குழுவிற்கு சட்டம் சார்ந்த தன்னார்வ தொண்டர்களாக சேவை புரிய கீழே குறிப்பிட்டுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

  1. ஆசிரியர்கள் (ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் உட்பட)
  2. ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் மூத்த குடிமக்கள்
  3. சமூகப் பணியில் முதுநிலை கல்விப் பயிலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள்
  4. அங்கன்வாடி பணியாளர்கள்
  5. மருத்துவர்கள் / உடல்நல நிபுணர்கள்
  6. மாணவர்கள் மற்றும் சட்டக் கல்லூரி மாணவர்கள்
  7. அரசியல் சார்பற்ற அரசு சாரா சமூக சேவை நிறுவனங்கள் மற்றும் சங்க பிரமுகர்கள்
  8. மகளிர் குழுக்கள், மைத்திரி சங்கங்கள் மற்றும் வறியோரை உள்ளடங்கிய சுய உதவிக் குழுக்கள் ஆகியவற்றின் உறுப்பினர்கள்
  9. மாவட்ட வட்ட சட்டப் பணிகள் தன்னார்வ சட்டப் பணியாளர்கள் பணிக்கு பொருத்தமாக கருதும் நபர்

குறைந்தபட்சம் கல்வி தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அடிப்படை கணினி அறிவு விரும்பத்தக்கது

வயது 18 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும்.

மதிப்பூதியம் நாள் ஒன்றுக்கு ரூபாய் 500

விண்ணப்பிக்க கடைசி நாள் 19/7/2024

தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் 12 நபர்களும், கோவில்பட்டி வட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவில் ஏழு நபர்களும், திருச்செந்தூர் வட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவில் ஏழு நபர்களும், ஸ்ரீ வைகுண்டம் வட்ட சட்டப்பணிகள் ஆணை குழுவில் ஏழு நபர்களும், சாத்தான்குளம் வட்ட சட்டப் பணிகள் ஆணைகுழுவில் ஏழு நபர்களும், விளாத்திகுளம் வட்ட சட்டப் பணிகள் ஆணை குழுவில் 5 நபர்களும் மற்றும் ஒட்டப்பிடாரம் வட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவில் 5 நபர்களும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

விண்ணப்ப படிவத்தினை நிரப்பி பதிவு தபாலில் கீழ்க்கண்ட முகவரிக்கு 19/7/2024 அன்று மாலை 5 மணிக்கு முன்பாக கிடைக்கப்பெறுமாறு அனுப்ப கோரப்படுகிறது

உயர்திரு. தலைவர் அவர்கள்,
தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு,
ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்,
தூத்துக்குடி- 628 003.

குறிப்பு: அறிவிப்பு தேதி 7.5.2024 விண்ணப்பித்தவர்கள் மறுமுறை விண்ணப்பிக்க வேண்டாம் என்று இதன் மூலம் கேட்டுக்கொள்கிறோம்.

TitleDescriptionStart DateEnd DateFile
Notification for Para Legal VolunteersSecond call for letter 02072024 03/07/202419/07/2024View (791 KB) 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *